Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திறைசேரியின் பணத்தை சிறுக சிறுக திருடியுள்ள ஹெக்கர்கள்; ஊடகவியாளரின் கேள்விக்கு அமைச்சின் செயலாளர் மௌனம்

திறைசேரியின் பணத்தை சிறுக சிறுக திருடியுள்ள ஹெக்கர்கள்; ஊடகவியாளரின் கேள்விக்கு அமைச்சின் செயலாளர் மௌனம்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சைபர் ஹேக்கர்களுக்கு (Cyber Hackers) பணம் செலுத்திய பரிவர்த்தனைகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படுவதற்கு ஏதுவாக, நிதி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலகுவீர்களா என நேற்று (23ஆம் திகதி) நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ‘திவயின’ எழுப்பிய கேள்விக்கு, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும முறையான பதிலை வழங்காது தவிர்த்துக் கொண்டார்.

அதற்குப் பதிலாகப் பதிலளித்த நிதி அமைச்சின் செயலாளர், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய செயற்பட அரச அதிகாரிகள் என்ற ரீதியில் அனைவரும் கடமைப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

அதேபோல், சர்ச்சைக்குரிய இந்தப் பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் அனுமதி வழங்கினீர்களா என ஊடகவியலாளர் சந்திப்பின் இறுதியில் ‘திவயின’ கேட்ட கேள்விக்கு நிதி அமைச்சின் செயலாளர் எந்தப் பதிலையும் வழங்கவில்லை.

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மகா திறைசேரியின் இந்தப் பரிவர்த்தனைகள் தொடர்பாக நீண்ட விளக்கமளித்த நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, சம்பந்தப்பட்ட சைபர் குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதும், செலுத்தப்பட்டுள்ள பணத்தில் முடிந்தவரை அதிகப்படியான தொகையை மீண்டும் பெற்றுக்கொள்வதுமே தற்போதுள்ள முக்கிய நோக்கம் என வலியுறுத்தினார்.

இந்தப் பணத்தை மீண்டும் பெற முடியாவிட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது என ‘திவயின’ வினவிய போது, “முழுத்தொகையையும் பெற முடியுமா? அல்லது ஒரு பகுதியை மாத்திரம் பெற முடியுமா? என்பது சட்ட நடவடிக்கைகளின் மூலமே தெரியவரும்” எனச் செயலாளர் தெரிவித்தார். அங்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், அதற்கான தீர்வு அடுத்தகட்ட விசாரணைகளில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள உள்வாரி விசாரணைகளின்படி, சில அதிகாரிகள் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதால் சில தகவல்களை வெளிப்படுத்த முடியாது என்றும் கலாநிதி சூரியப்பெரும தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக நிதி அமைச்சுக்கு 2026 ஜனவரி மாதமே தெரியவந்ததாகவும், அதன் பின்னர் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் கடந்தகால பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, அந்தப் பணம் சைபர் குற்றவாளிகளின் கைக்குச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டதாகவும் நிதிச் செயலாளர் குறிப்பிட்டார். மேலும், 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் என்பது ஒரே பரிவர்த்தனை அல்ல, அது பல பரிவர்த்தனைகளின் கூட்டுத்தொகை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
வரலாற்றில் முதல்முறை; பண்டாரநாயக்க விமான நிலையத்தில் 22 பௌத்த பிக்குகள் போதைப்பொருளுடன் கைது

வரலாற்றில் முதல்முறை; பண்டாரநாயக்க விமான நிலையத்தில் 22 பௌத்த பிக்குகள் போதைப்பொருளுடன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு