ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“ஈரான் வீழ்ச்சியடையும் நிலையில் இருப்பதாக எங்களிடம் தெரிவித்தனர். அவர்களின் தலைமையைத் தேடும் சூழ்நிலையில் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க விரும்புவதாகவும் அவர்கள் கூறினர். இதை அவர்களால் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்” என தனது சமூக வளைத்தலத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டது. இருப்பினும், லெபனான் மீதான தாக்குதல் காரணமாக மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், உலகளவில் எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் எண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.








