மாத்தறை, தெனிப்பிட்டியவில் மருத்துவ மையத்துக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 765 போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடலோர பொலிஸார் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் பிரதிநிதிகள் நேற்று (28) நடத்திய சோதனையில் இப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போதை மாத்திரைகளுடன் கைதான பெண் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








