Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனையில் திருடன் திருடிய தங்க ஆபரணங்களை வீட்டுக்கு கொண்டு சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

வாழைச்சேனையில் திருடன் திருடிய தங்க ஆபரணங்களை வீட்டுக்கு கொண்டு சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலி மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் போன்ற திருட்டுப் பொருட்களை வீட்டில் வைத்திருந்த ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் (கொஸ்தாப்பர்) ஒருவரை நேற்று புதன்கிழமை (29) மாலையில் கல்குடா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து
கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வாழைச்சேனை பொலிஸ் பிரதேசத்தில் கடந்த 21ம் திகதி வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்த 65 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருட்டுப் போயுள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக நாவலடி பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவரை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்த பொலிசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த திருடன் திருடிய தங்க ஆபரணங்கள், பணம் என்பவற்றை வீட்டில் வைத்திருந்துள்ளார்.

இதன்போது திருடனின் வீட்டிற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்து தற்போது ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்ட கைது செய்யப்பட்ட பொலிஸ் கொஸ்தாப்பர் சென்று நான்தான் இந்த சம்பவத்தை விசாரணை செய்து வருவதாக கூறி திருடனிடம் இருந்து திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை வாங்கி எடுத்துக் கொண்டார்.

இதனையடுத்து அதனை பொலிஸ் கொஸ்தாப்பர் அவரது நண்பர் ஒருவரிடம் இதைனை வைத்திருக்குமாறு அந்த திருட்டுப் பொருட்களை கொடுத்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு விசேட நடவடிக்கைக்காக பாசிக்குடா சுற்றுலா மையத்தில் கடமைக்காக கடமையாற்றி வந்த குறித்த பொலிஸ் கொஸ்தாப்பரை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய சம்பவ தினமான நேற்று புதன்கிழமை மாலை கைது செய்ததுடன் நண்பனிடம் கொடுத்து வைத்திருந்த திருட்டு தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
போதைப்பொருள் கடத்திய 22 தேரர்கள்; பிரதான சூத்திரதாரிகளான இரு தேரர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி!

போதைப்பொருள் கடத்திய 22 தேரர்கள்; பிரதான சூத்திரதாரிகளான இரு தேரர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு