ஏனைய நாடுகளிலே இன்று எரிபொருளுக்கான பாரியளவிலான விலை அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது, வரிசை யுகம் ஏற்பட்டது. ஆனால் இலங்கையிலே அப்படி ஒரு நிலைமை இல்லாத வகையிலே நாங்கள் இந்த நாட்டைச் சரியான முறையில் கொண்டுசெல்கின்றோம் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
சொந்தமாக இருக்க ஒரு இடம் ஒரு அழகான வாழ்க்கை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளை அமைப்பதற்கான நிதிகள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் கீழ் தேசிய வீட்டு வசதி வேலைத்திட்டத்திற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.








போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் இ.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் தங்கத்துரை சுபாஸ்கரன், திணைகள் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜாசக்தி தலைவர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தெரிவு செய்யப்பட்ட 38 பயனாளிகளுக்கு தலா 150,000 ரூபா வீதம் காசோலைகள் வழங்கப்பட்டது. இதற்காக 5.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,








