அதிக அச்சம் உண்டாக்குகிற ஆயுதம் ஒன்றை கொண்டு, மிக விரைவில் எதிரி படைகளை எதிர்கொள்வோம் என ஈரானின் கடற்படை தளபதியான ஷாராம் இரானி குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆயுதம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதனால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படாது என்று நான் நம்புகிறேன் என்றார்.
ஈரானின் எண்ணெய் வர்த்தக நடவடிக்கைகளை முடக்கி பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி, ஈரானை கட்டாயப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்து விடலாம் என்று ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிடுகிறது.
ஈரானுக்கு எதிரான முன்னறிவிக்கப்படாத ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ள அமெரிக்கா தன்னுடைய நடவடிக்கைகளில் வெற்றி பெற்று விடலாம் என தவறாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த விடயத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களை விட அமெரிக்கர்கள் மிக மோசம். ஏனெனில் வறுமையால், சோமாலிய கடற்கொள்ளையர்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் அமெரிக்கர்களோ, ஈரான் கப்பல் ஊழியர்களை சிறை பிடித்து வைத்து கொண்டு அராஜகங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.








