Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாய் – நரி கலப்பினம் கண்டுபிடிப்பு!

நாய் – நரி கலப்பினம் கண்டுபிடிப்பு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

உலகிலேயே முதன் முறையாக நாய் – நரி கலப்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயிரியல் வல்லுனர்கள் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2021- ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ கிராண்டே பகுதியில் நரி போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் மீட்கப்பட்டது. காயம் அடைந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த உயிரினம் குறித்து உயிரியல் வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். பார்ப்பதற்கு நாய் அல்லது நரி போன்ற தோற்றம் கொண்ட இந்த விலங்குக்கு நாய் வழக்கமாக உண்ணும் உணவு பொருட்களை பராமரிப்பாளர்கள் கொடுத்தனர்.

ஆனால் இந்த உயிரினம் குட்டி எலிகளை விருப்பத்துடன் சாப்பிட்டு வந்தது. அதன் கண்கள் வீட்டு நாயை போன்றும், காதுகள் நீண்டு நரியைப் போன்றும் தோற்றம் அளித்தது. மேலும் இந்த விலங்கு நாயைப் போன்று கத்தி வந்துள்ளது. இந்நிலையில் இந்த உயிரினம் நாய் – நரி இணைந்த கலப்பினம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கலப்பினத்தில் கண்டறியப்பட்ட முதல் உயிரினம் இதுதான் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி மேலும் அவர்கள் தெரிவித்ததாவது-

இந்த கலப்பு உயிரினம் நாய் போன்று சாதுவாக காணப்படவில்லை. காட்டு விலங்குகளுக்கு இருக்கும் ஆபத்தான குணங்கள் இருந்தன

பெண் கலப்பினமான இது மனிதர்களிடம் நெருங்கி பழகாது. காயம் அடைந்திருந்ததால் இந்த கலப்பினத்திற்கு நீண்ட நாட்கள் சிகிச்சை தேவைப்பட்டது. அதன்பின்னர் பூரண குணம் அடைந்தது.

நாய் – நரி கலப்பினத்திற்கு டாக்ஸிம் (Doxim) என்று பெயர் வைத்திருந்தோம். அதனை நன்றாக பராமரித்த பின்னர் உடல் நிலை தேறியதும் அதனை சான்டா மரியா நகரில் உள்ள உயிரியல் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தோம். இருப்பினும் இந்த டாக்ஸிம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இறந்து விட்டது. இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டுவதாக இல்லை? ; சஜித் கேள்வி!

உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டுவதாக இல்லை? ; சஜித் கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.