முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
எதிர்க்கட்சியினருக்கு வெளியில் கூட்டங்கள் நடத்தவும், கோஷங்கள் எழுப்பவும் சிரமம் இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது, “இவ்வாறான சூழ்நிலைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும். இது சாதாரணமான ஒன்றாகும்” என்று அவர் தெரிவித்தார்.
அதேபோல், சமீபத்தில் அவரது கட்சியுடன் தொடர்புடைய ஒருவருக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கருத்து கேட்டபோது, “சிலர் தங்களால் செய்ய முடியாதவற்றை மறைக்கவும், எதிர்காலத்தில் ஆட்சியை இழக்க நேரிடும் என்ற அச்சத்தினாலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.








