Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சர்வதேச மே தின நிகழ்வு!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சர்வதேச மே தின நிகழ்வு!

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் சர்வதேச மே தின நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் பல முக்கிய அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை முன்வைத்து கருத்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வு மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில், கட்சியின் பிரதித் தலைவர் திரவியம் தலைமையில் நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்பாக இருந்து மே தின பேரணி ஆரம்பமாகி, பெருமளவான கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

பிரசாந்தன் தனது உரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் விவசாயம் முக்கிய தொழில்களாக இருந்தும், மக்கள் இன்னும் வறுமையில் தள்ளாடுவதாகக் குறிப்பிட்டார். மீன் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்திகள் அதிகமாக இருந்தாலும், அவற்றின் விலைகளை உற்பத்தியாளர்கள் நிர்ணயிக்க முடியாத நிலை நிலவுகிறது என்றும், இடைத்தரகர்கள் மற்றும் முதலாளிகள் மட்டுமே லாபம் பெறுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், வாகரை பகுதிகளில் மீனவர்கள் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகள் குறித்து அவர் கவலை வெளியிட்டார். கரைவலை இழுக்கும் முறைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன என்றும், அரசாங்கம் இதற்கு தீர்வு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

பிரதேச சபைகள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களின் செயல்திறனையும் அவர் விமர்சித்தார். மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள், வீதி வசதி, மின்விளக்கு, காட்டு யானை தொல்லை போன்றவற்றில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றார்.

அதேபோன்று, கடந்த காலத்தில் TMVP தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நினைவுகூர்ந்த அவர், தற்போதைய நிர்வாகம் அதனை விட சிறந்த முன்னேற்றங்களை எட்டவில்லை என்று குற்றம்சாட்டினார். மக்கள் அளித்த ஆதரவை பயன்படுத்தி செயற்படாத அரசியல் கட்சிகளை அவர் விமர்சித்தார்.

மேய்ச்சல் தரைப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள் இன்று அதிகாரத்தில் இருந்தும் அதற்கான தீர்வை வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் 24,500 ஹெக்டேயர் மேய்ச்சல் நிலங்களை ஒதுக்க TMVP முன்மொழிந்திருந்தாலும், பின்னர் அது குறைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, கிழக்கு மாகாணத்தில் கால்நடை வளர்ப்பு என்பது ஒரு பொருளாதார செயல் மட்டுமல்ல, மக்களின் கலாச்சாரத்துடன் இணைந்த ஒன்று என்றும், அதற்கான தனித்துவமான கொள்கைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
செய்திகள்

முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

September 8, 2026
விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு
செய்திகள்

விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு

September 8, 2026
மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்
அரசியல்

மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்

September 8, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

September 8, 2026
முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!
செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!

September 8, 2026
Next Post
போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில்!

போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு