Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னாரில் கணவனை படுகொலை செய்து மலக்குழியில் வீசிவிட்டு பொலிஸில் சரணடைந்த பெண்

மன்னாரில் கணவனை படுகொலை செய்து மலக்குழியில் வீசிவிட்டு பொலிஸில் சரணடைந்த பெண்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக பெண்ணொருவர், தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசலகூட குழியில் வீசியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சடலம் நேற்று (04) மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் மூர்வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை (03) துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசல கூட குழியினுள் போட்டுள்ளார். பின்னர், சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் சரணடைந்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு தெரியப்படுத்தியதோடு கொலையை செய்த குறித்த பெண்ணையும் அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்ற நிலையில் சடலம் மலசலகூட குழியில் இருந்து எடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் 36 வயதுடையவர் என்றும் கொலை செய்த அவரது மனைவி 29 வயதுடையவர் எனவும் தெரிய வருகிறது.

குடும்பத் தகராறு முற்றிய நிலையில் மனைவியால் கணவன் கொலை செய்யப்பட்டு சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உரப்பையில் போட்டு வீட்டின் மலசலகூட குழிக்குள் வீசப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கொலை செய்த அவரது மனைவி மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் மன்னார் பகுதியில் மக்கள் மத்தியில் அச்ச நிலையை ஏற்படுத்தி உள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
செய்திகள்

முதலாம் தர சிறுவனுக்கு எமனான பாலத்திற்கு தோண்டப்பட்ட குழி; மேற்பார்வையாளருக்கு மட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

September 8, 2026
விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு
செய்திகள்

விளக்கமறியலில் இருந்தே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ; அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டு

September 8, 2026
மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்
அரசியல்

மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்

September 8, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

September 8, 2026
Next Post
அனுர அரசாங்கத்தின் மீது சிறிதரன் பாரிய குற்றச்சாட்டு; திட்டமிட்ட சதியா?

அனுர அரசாங்கத்தின் மீது சிறிதரன் பாரிய குற்றச்சாட்டு; திட்டமிட்ட சதியா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு