மட்டக்களப்பு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கைது செய்யப்பட்ட மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (08) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி குறித்த அலுவலகத்திற்குள் நுழைந்து அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவித்து செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும், ஏற்கனவே நீதிமன்றில் ஆஜராகாதமை தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளும் அவரது கைது நடவடிக்கைக்கு காரணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








