இலங்கையில் சீமெந்தின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீமெந்தின் விலை 300 ரூபாயினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தையில் இரண்டாயிரத்து 100 ரூபாயாக காணப்பட்ட சீமெந்து மூடையொன்று, தற்போது, இரண்டாயிரத்து 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.