Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவில் காணாமல் போன மீனவர்களை தேடி தீவிர நடவடிக்கை

முல்லைத்தீவில் காணாமல் போன மீனவர்களை தேடி தீவிர நடவடிக்கை

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று (26) காலை 07.00 மணியளவில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போயுள்ள கடற்றொழிலாளர்கள் மூவரையும் கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து தேடும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

காணாமல்போன மீனவர்களைக் கண்டுபிடிக்க தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தேடுதல் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சு, இலங்கை கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி ஆகியோருடன் அமைச்சர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

காணாமல்போன மீனவர்கள் முல்லைத்தீவு அம்பலவான்பொக்கணை பகுதியைச் சேர்ந்த அந்தோனி ஜூட் (26), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீ புஷ்பராஜா (42) மற்றும் மன்னாரைச் சேர்ந்த முஹம்மது ரிஸ்வான் (48) என இனங்காணப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை மற்றும் கடற் கொந்தளிப்பு காரணமாக தேடுதல் செயற்பாடுகளுக்கு சவால்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டரை ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், வான்வழித் தேடுதல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் , இலங்கை கடற்படை மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அமைச்சர் சந்திரசேகர் இந்நடவடிக்கைகளை நெருக்கமாகக் கண்காணித்து வருவதுடன், காணாமல்போன மீனவர்களைக் கண்டறிந்து அவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளதாக மீன்பிடி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3.87 கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது!
செய்திகள்

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3.87 கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது!

October 28, 2026
48cc மோட்டார் சைக்கிள்களுக்கும் பதிவு கட்டாயம்! – மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

48cc மோட்டார் சைக்கிள்களுக்கும் பதிவு கட்டாயம்! – மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் எச்சரிக்கை

October 28, 2026
கொழும்பில் மூன்று மாடி வீட்டிலிருந்து விழுந்த 15 வயதுச் சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

கொழும்பில் மூன்று மாடி வீட்டிலிருந்து விழுந்த 15 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

October 28, 2026
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; நளிந்த ஜயதிஸ்ஸ

October 28, 2026
புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்; சிறீதரன் எம்.பி
செய்திகள்

புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்; சிறீதரன் எம்.பி

October 28, 2026
இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற புதிய வாய்ப்பு!
செய்திகள்

இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற புதிய வாய்ப்பு!

October 28, 2026
Next Post
புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்; சிறீதரன் எம்.பி

புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்; சிறீதரன் எம்.பி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு