கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெயார்ட்ஸ் பிராட்வே பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீட்டின் மேல் மாடியிலிருந்து விழுந்து காயமடைந்த 15 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி காயமடைந்த நிலையில், கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரேண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








