Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; நளிந்த ஜயதிஸ்ஸ

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; நளிந்த ஜயதிஸ்ஸ

47 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களால் உலகளாவிய எரிபொருள் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், இலங்கையிலும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் நேரடித் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக எரிபொருள் விலைகள் பலமுறை அதிகரிக்கப்பட்டுள்ளதால் கணிசமான விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் பல்வேறு மானியங்களை வழங்கி வருவதுடன், மக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, மின்சாரக் கட்டண மானியங்களுக்காக 17.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆண்டு 15 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா 6,000 ரூபா வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அரச ஊழியர்களின் வருடாந்த சம்பள அதிகரிப்புக்காக மேலதிகமாக ஒதுக்கப்படும் நிதிக்கு இணையான தொகை பொதுவாக எரிபொருள் மானியங்களுக்காக ஒதுக்கப்படுவதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, மேலதிக நிவாரணங்கள் வழங்கப்படுமாயின் அதற்கான நிதி திறைசேரியின் வளங்களுக்குள் இருந்தே ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3.87 கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது!
செய்திகள்

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3.87 கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது!

October 28, 2026
48cc மோட்டார் சைக்கிள்களுக்கும் பதிவு கட்டாயம்! – மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

48cc மோட்டார் சைக்கிள்களுக்கும் பதிவு கட்டாயம்! – மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் எச்சரிக்கை

October 28, 2026
கொழும்பில் மூன்று மாடி வீட்டிலிருந்து விழுந்த 15 வயதுச் சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

கொழும்பில் மூன்று மாடி வீட்டிலிருந்து விழுந்த 15 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

October 28, 2026
புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்; சிறீதரன் எம்.பி
செய்திகள்

புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்; சிறீதரன் எம்.பி

October 28, 2026
முல்லைத்தீவில் காணாமல் போன மீனவர்களை தேடி தீவிர நடவடிக்கை
செய்திகள்

முல்லைத்தீவில் காணாமல் போன மீனவர்களை தேடி தீவிர நடவடிக்கை

October 28, 2026
இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற புதிய வாய்ப்பு!
செய்திகள்

இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற புதிய வாய்ப்பு!

October 28, 2026
Next Post
கொழும்பில் மூன்று மாடி வீட்டிலிருந்து விழுந்த 15 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

கொழும்பில் மூன்று மாடி வீட்டிலிருந்து விழுந்த 15 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு