Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்; சிறீதரன் எம்.பி

புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்; சிறீதரன் எம்.பி

43 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை கனடா முதலில் முன்னெடுத்து, ஏனைய நாடுகளும் அதனைப் பின்பற்றுவதற்கு வழிகாட்டியாகச் செயற்பட வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் கடந்த 27ஆம் திகதி, அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறித்த சந்திப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுவலோய் மஜும்தார் (Shuvaloy Majumdar), கொஸ்டாஸ் மெனெகாகிஸ் (Costas Menegakis) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வெளித்தொடர்புப் பிரிவின் பிரதிநிதி டரினா ஒஸ்ட்ரோவ்ஸ்கா (Daryna Ostrovska) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தொடர்ந்து பேணுவதன் அவசியத்தை கனடா மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனச் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். மேலும், கனடா தடையை நீக்குவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், ஏனைய நாடுகளும் அதேபோன்ற தீர்மானங்களை எடுப்பதற்கு வழிவகுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைக்கு சர்வதேச உதவி கோரிக்கை
இதனிடையே, யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச தடயவியல் நிபுணத்துவத்தையும் நவீன ஆய்வு உபகரணங்களையும் பெற்றுக்கொள்வது குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் நம்பகத்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதற்கு சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பும், மனித எச்சங்களை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்வதற்கான நவீன தடயவியல் தொழில்நுட்பங்களும் அவசியம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, விசாரணைகளுக்கு உதவும் வகையில் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் சர்வதேச தடயவியல் நிபுணத்துவத்தையும் கனடா பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குவது மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்கு சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொள்வது ஆகிய இரண்டு முக்கிய விடயங்களும் இந்தச் சந்திப்பில் கவனம் பெற்றுள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குவது தொடர்பில் கட்சித் தலைமையுடன் கலந்தாலோசித்து சாதகமான முடிவை எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் கனடாவைச் சேர்ந்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர் அமலிதன் மற்றும் அவரது குழுவினரும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொழும்பில் மூன்று மாடி வீட்டிலிருந்து விழுந்த 15 வயதுச் சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

கொழும்பில் மூன்று மாடி வீட்டிலிருந்து விழுந்த 15 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

October 28, 2026
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; நளிந்த ஜயதிஸ்ஸ

October 28, 2026
முல்லைத்தீவில் காணாமல் போன மீனவர்களை தேடி தீவிர நடவடிக்கை
செய்திகள்

முல்லைத்தீவில் காணாமல் போன மீனவர்களை தேடி தீவிர நடவடிக்கை

October 28, 2026
இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற புதிய வாய்ப்பு!
செய்திகள்

இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற புதிய வாய்ப்பு!

October 28, 2026
ஆந்திராவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை; 85,000 பேர் முகாம்களில் தஞ்சம்!
செய்திகள்

ஆந்திராவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை; 85,000 பேர் முகாம்களில் தஞ்சம்!

October 28, 2026
மாத்தறை குடாவெல்ல கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் மாயம்!
செய்திகள்

மாத்தறை குடாவெல்ல கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் மாயம்!

October 28, 2026
Next Post
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; நளிந்த ஜயதிஸ்ஸ

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; நளிந்த ஜயதிஸ்ஸ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு