Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணத்தில் “ஸ்டடி இன் யாழ்ப்பாணம்” கல்வி நிறுவனம் திறப்பு!

யாழ்ப்பாணத்தில் “ஸ்டடி இன் யாழ்ப்பாணம்” கல்வி நிறுவனம் திறப்பு!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கின் மாணவர்களை சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் நேரடியாக இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “ஸ்டடி இன் யாழ்ப்பாணம்” கல்வி நிறுவனத்தின் பிரமாண்ட திறப்பு விழா இன்று (08) யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியில் அமைந்துள்ள அதன் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு, நாடா வெட்டி நிறுவனத்தின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

“கற்க மறுப்பவர் வாழ மறுப்பவர்” என்ற பழமொழிக்கிணங்க, வடக்கு மக்களின் கல்வித் தேடலுக்கு வலுசேர்க்கும் நோக்கில் இந்த கல்வி நிறுவனம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடபகுதியில் திறமையான மாணவர்கள் பலர் இருந்தபோதிலும், அரச பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு சர்வதேச அளவில் உயர்கல்வியை தொடர இது சிறந்த வாய்ப்பாக அமையும் என நிறுவனத்தின் பணிப்பாளர் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்ப்பாண மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஜெறோம் செல்வநாயகம், யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் சந்திரமௌலி லலீசன் மற்றும் “ஸ்டடி இன் யாழ்ப்பாணம்” கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர்களான ரிஷ்வான், ரிஸ்மி, செயல்பாட்டு தலைவர் ஐயாத்துரை கஜமுகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அதிதிகள் மங்கள வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டதுடன், மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு விழா அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.

வடபகுதி மாணவர்களின் கல்வித் தரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதில் இந்த கல்வி நிறுவனம் முக்கிய பங்காற்றும் என நிகழ்வில் உரையாற்றிய விருந்தினர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
30 இலட்சம் ரூபா இலஞ்சம்; குருணாகல் மாநகர சபைப் பிரதி மேயர் பத்தரமுல்லையில் வைத்து அதிரடிக் கைது!

30 இலட்சம் ரூபா இலஞ்சம்; குருணாகல் மாநகர சபைப் பிரதி மேயர் பத்தரமுல்லையில் வைத்து அதிரடிக் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு