உலக அன்னையர் தினம் இன்று (மே 10) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தாய்மார்களின் அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் குடும்பத்திற்காக அவர்கள் செய்யும் தியாகங்களை கௌரவிக்கும் நாளாக இது பார்க்கப்படுகிறது.
அன்னையர் தினத்தின் நவீன கொண்டாட்டம் அமெரிக்காவில் சமூக செயற்பாட்டாளர் அனா ஜார்விஸ் அவர்களால் தொடங்கப்பட்டது. பின்னர் 1914 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இது அதிகாரப்பூர்வ தினமாக அறிவிக்கப்பட்டது.
இன்றைய தினத்தில் பலர் தாய்மார்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, பரிசுகள் வழங்கி, குடும்பத்துடன் நேரம் செலவிட்டு நன்றியை வெளிப்படுத்துகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் அன்னையர் தின வாழ்த்துக்கள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.








