மித்தெனிய, உழ்ஹிட்டியாவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலக பிரமுகர் பெக்கோ சமனின் தாயார் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








