Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை மாநகர சபைக்கு மேல் நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம்

கல்முனை மாநகர சபைக்கு மேல் நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகளுக்காக தோண்டப்பட்டு, பின்னர் முறையாகச் சீரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளை புனரமைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்ய கல்முனை மாநகர சபைக்கு கல்முனை மேல் நீதிமன்றம் மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.

குறித்த வழக்கு, இலங்கை நீதிக்கான மையம் (Center for Justice Sri Lanka) அமைப்பினால் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குடிநீர் இணைப்புப் பணிகளுக்காக மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல்வேறு வீதிகள் தோண்டப்பட்ட போதிலும், பணிகள் நிறைவடைந்த பின்னர் அவை முறையாக மறுசீரமைக்கப்படாததால் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகன சாரதிகள் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்ததாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வழக்கு நேற்று முன்தினம் (08) வெள்ளிக்கிழமை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஜுட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கல்முனை மாநகர சபை சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தில் முன்னேற்ற அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில், குடிநீர் இணைப்புகளுக்காக வெட்டப்பட்டிருந்த இடங்களில் இதுவரை சுமார் 300 வீதி பகுதிகள் முழுமையாகப் புனரமைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், எஞ்சியுள்ள வீதிப் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்ய மேலும் மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுவதாக மாநகர சபை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனை பரிசீலித்த நீதிபதி, மீதமுள்ள அனைத்து வீதிப் புனரமைப்புப் பணிகளையும் நிறைவு செய்ய 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் விண்ணப்பதாரர் சார்பில் இலங்கை நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் மற்றும் செயலாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் ஆகியோர் முன்னிலையாகினர்.

அதேவேளை, கல்முனை மாநகர சபை சார்பில் சட்டத்தரணி சப்ரின் சலாஹுதீன் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்களும் நீதிமன்றத்தில் முன்னிலை யாகியிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்
செய்திகள்

மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்

September 27, 2026
சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்
செய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்

September 27, 2026
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்
செய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

September 27, 2026
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்
செய்திகள்

யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்

September 27, 2026
Next Post
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜோசப் விஜய்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜோசப் விஜய்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.