Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் பாரிய கணினி மோசடி வலையமைப்பு முறியடிப்பு; 198 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடிக் கைது!

இலங்கையில் பாரிய கணினி மோசடி வலையமைப்பு முறியடிப்பு; 198 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடிக் கைது!

3 months ago
in செய்திகள்

கணினி குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 198 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்வடுகொட பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, விடுதி ஒன்றில் தங்கியிருந்த 110 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 58 கணினிகள் மற்றும் 79 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடந்துவ பகுதியில் உள்ள விடுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 35 இந்திய பிரஜைகள் மற்றும் 20 நேபாள பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

20 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 25 கணினிகள், 119 கையடக்கத் தொலைபேசிகள், ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம், மேலும் கார் மற்றும் ஜீப் வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிங்வத்தை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 28 இந்திய பிரஜைகள் மற்றும் 5 நேபாள பிரஜைகளும் பொலிஸார் மேற்கொண்ட மற்றொரு சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இவர்கள், உரிய விசா இன்றி தங்கியிருந்தமை, சட்டவிரோத சிகரெட்டுகள் வைத்திருந்தமை மற்றும் கணினி குற்றச்செயல்களில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
717 மதுபான கடைகளை மூடும்படி தமிழக முதலமைச்சர் அதிரடி உத்தரவு

717 மதுபான கடைகளை மூடும்படி தமிழக முதலமைச்சர் அதிரடி உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு