Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது; அமைச்சர் அறிவிப்பு

எரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது; அமைச்சர் அறிவிப்பு

2 months ago
in செய்திகள்

நாட்டில் தற்போது அமுலில் உள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்க அரசாங்கம் எந்தத் திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் தற்போது எந்தவித தட்டுப்பாடும் இல்லையெனவும், தேவையான எரிபொருள் கையிருப்பு ஏற்கனவே முன்கூட்டியே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில் தேவையற்ற நுகர்வை கட்டுப்படுத்துவது அவசியம் எனவும், அந்நியச் செலாவணி வீணாக வெளியேறுவதை தடுக்கும் வகையில் இந்த முறை உதவியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வரிசைகள் உருவாகுதல் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்படும் பீதி கொள்வனவுகளைத் தவிர்ப்பதற்கும் இந்த முறை பயனுள்ளதாக உள்ளதால் இது தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

எதிர்காலத்தில் எரிபொருள் ஒதுக்கீடு அளவை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என்றாலும், கியூ.ஆர் முறைமையை முழுமையாக நீக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் குறியீடுகள் முறையாகச் சரிபார்க்கப்படாமல் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரதி அமைச்சர் அர்க்கம் இலியாஸ் விளக்கமளித்துள்ளார்.

எரிபொருள் விநியோக முறை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விடுவிக்கப்பட்ட எரிபொருள் அளவுக்கும் கியூ.ஆர் முறை மூலம் விநியோகிக்கப்பட்ட அளவுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்
செய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்

July 25, 2026
700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்
செய்திகள்

700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்

July 25, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
Next Post
கடும் மழையினால் வெல்லாவெளி-மண்டூர் பாதை துண்டிக்கப்பட்டது – மாற்றுவழியை பயன்படுத்துமாறு அறிவிப்பு

கடும் மழையினால் வெல்லாவெளி-மண்டூர் பாதை துண்டிக்கப்பட்டது - மாற்றுவழியை பயன்படுத்துமாறு அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு