மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14) தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மொறக்கட்டாஞ்சேனை தேவபுரம் காளிகோவில் வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய பத்மராஜா டினேஸ் என்ற சிறைக்கைதி வேறு நபர் ஒருவருடன் சண்டையிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றம் 3 மாதகாலம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

இந்த நிலையில் சம்பவ தினமான இன்று காலை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அவரை சிறைச்சாலைக்கு வெளியில் கட்டுமானப்பணியில் மேசனாக செயற்படுத்தி வந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்த நிலையில் தப்பி ஒடிய தலைமறைவாகியுள்ள சிறைக் கைதியை வலைபோட்டு தேடிவருகின்றனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை உத்தியோகத்தர் டீமற்கொண்டுவருகின்றனர்.








