Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் சினிமா பாணியில் காதலர்களை மிரட்டிய மர்ம கும்பல்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

இலங்கையில் சினிமா பாணியில் காதலர்களை மிரட்டிய மர்ம கும்பல்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

6 months ago
in செய்திகள்

எல்ல பிரதேசத்தில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட வரும் காதல் ஜோடிகளை அச்சுறுத்தி, குற்ற புலனாய்வு அதிகாரிகள் என அடையாளப்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், கொள்ளையடிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் கொள்ளையிட்ட சுமார் 482,000 ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை பதுளை நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்துள்ளனர்.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு கைத்தொலைபேசிகளை ரிதிமாலியத்த மற்றும் பெத்தியாகொட ஆகிய பகுதிகளில் உள்ள இருவருக்கு விற்பனை செய்துள்ளனர்.

திருட்டுப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாலி எல, அந்தலாவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இந்த கொள்ளைச் சம்பவங்களின் முக்கிய நபராகும்.

அவருக்கு எதிராக கதிர்காமம் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் 60 லட்சம் ரூபாய் கொள்ளையிட்டமை, ஹாலி எல மற்றும் பதுளை பகுதிகளில் வீடுகளை உடைத்து திருடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

2025ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஒன்பது வளைவு பாலத்தைப் பார்க்க வந்த காதல் ஜோடியை அச்சுறுத்தி, 18 வயதுடைய யுவதியை பலவந்தமாக காடுகளுக்குள் இழுத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்த சம்பவத்துடனும் அவருக்கு தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எல்ல நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 4125 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் அடகு பற்றுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டன.

அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, மற்றைய சந்தேகநபரான 26 வயதுடைய இளைஞர் தெமோதர பகுதியில் வைத்து 2175 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேநபர்கள் போதைப்பொருள் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!
செய்திகள்

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!

October 28, 2026
வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!

October 28, 2026
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!
உலக செய்திகள்

ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!

October 28, 2026
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!

October 28, 2026
களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!
செய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!

October 28, 2026
வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!

October 28, 2026
Next Post
வாகரை அரச கால் நடை வைத்திய அதிகாரி திணைக்களத்தினால் விழிப்புணர்வு நிகழ்வு

வாகரை அரச கால் நடை வைத்திய அதிகாரி திணைக்களத்தினால் விழிப்புணர்வு நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு