இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டதில் பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
குறித்த ரயில் இன்று அதிகாலை 3.25 மணிக்கு பொல்கஹவெலையிலிருந்து புறப்பட்டு தெற்கு களுத்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.









