மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை தூபிக்கு முன்பாக 14ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, தாயகசேனையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் வழங்கல் நிகழ்வு உணர்வுரீதியாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வை தாயகசேனை அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பொதுமக்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச மக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.








