Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரூபாவின் வீழ்ச்சியால் இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிரடியாக உயரும் அபாயம்!

ரூபாவின் வீழ்ச்சியால் இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிரடியாக உயரும் அபாயம்!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை இறக்குமதிச் செலவினங்கள் வேகமாக அதிகரித்துச் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கும், ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கும் அரசாங்கம் பல புதிய விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்த அவதானம் செலுத்தி வருகின்றது.

அதற்கமைய, வெளிநாட்டுச் செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி ரூபாவின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், வாகன இறக்குமதி சுங்க வரியின் மீதான கூடுதல் கட்டணத்தை 50 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது.

டொலர் கையிருப்பு பெருமளவில் செலவிடப்படும் இறக்குமதித் துறைகளை இனங்கண்டு, அவற்றுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் வெளிநாட்டுச் கையிருப்பைப் பாதுகாப்பது குறித்து அரசாங்கம் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக சிரேஷ்ட அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்து வருவதன் நேரடி விளைவாக, எதிர்வரும் வாரங்களில் ஏனைய அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் வேகமாக உயரக்கூடும் என இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, மத்திய கிழக்கில் நிலவும் யுத்தச் சூழல் மற்றும் உர நெருக்கடி காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் இந்தியா சீனி ஏற்றுமதியை அவசரமாகத் தடை செய்துள்ளது.

இந்தியாவின் இந்த முடிவையடுத்து, உள்நாட்டு சீனி இறக்குமதியாளர்கள் தற்போது தாய்லாந்து மற்றும் பிரேசில் போன்ற மாற்றுச் சந்தைகளை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளனர்.

அடுத்த இரண்டு மாதங்களுக்குப் போதுமான சீனி இருப்பு தற்போது நாட்டில் உள்ளதாக புறக்கோட்டை அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு தயார் நிலையில்

வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு தயார் நிலையில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.