Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுமந்திரன் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக மாவீரர் குடும்பங்களை பயன்படுத்துகிறார்; இளம்பிறையன் குற்றச்சாட்டு

சுமந்திரன் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக மாவீரர் குடும்பங்களை பயன்படுத்துகிறார்; இளம்பிறையன் குற்றச்சாட்டு

4 months ago
in அரசியல், செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன், தமிழரசு கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அதன் தலைவர்களின் கருத்து மாற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கடந்த காலங்களில் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகளுக்கு கால அவகாசம் தேவை என்றும், அதேசமயம் புலிகளும் போர் குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கூறியிருந்ததை ஊடகவியலாளர் நினைவூட்டினார்.

இன்று அதே நேரத்தில் தமிழரசு கட்சிக்குள் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் கூறும் நிலைப்பாடு காணப்படுவதாகவும் இது தொடர்பில் உங்கள் பார்வை என்ன எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த விரிவுரையாளர், இலங்கை அரசியலை தமிழ்நாட்டு அரசியல் சூழலுடன் ஒப்பிடலாம் எனக் கூறினார். “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை” என்ற ஜெயலலிதாவின் கருத்தை எடுத்துக்காட்டாக கூறிய அவர், அரசியல்வாதிகள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வது சாதாரணம் என தெரிவித்தார்.

சுமந்திரன் போன்ற அரசியல் தலைவர்கள் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்கள் தொடர்பில் வழங்கும் கருத்துகள் பெரும்பாலும் அரசியல் தேவைகளின் அடிப்படையில் அமைந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையில் நடந்த போர் சம்பவங்கள் குறித்து முழுமையான மற்றும் சரியான புரிதல் அவசியம் எனவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்து தரப்பினரின் செயற்பாடுகளும் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப தலைவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வது தொடர்ச்சியாக காணப்படும் ஒரு நிகழ்வு எனவும், தற்போதைய நிலை எவ்வளவு காலம் தொடரும் என்பதை கூற முடியாது எனவும் அவர் முடிவில் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்
செய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்

September 10, 2026
யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்
செய்திகள்

யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்

September 10, 2026
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து
செய்திகள்

பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து

September 10, 2026
மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
Next Post
இன்று நள்ளிரவு முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு