ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக நேற்று புதன்கிழமை (20) நிலத்தை தோண்டும் போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பழுதடைந்த கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் வாள் ஒன்றும் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த காணியில் சம்பவதினமான நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிலத்தை தோண்டும் போதே இந்த ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு காணி உரிமையாளர் பொலிசாருககு அறியப்படுத்தியதையடுத்து அதன பொலிசார் மீட்டனர்
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.








