Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வித்தியா கொலை குற்றவாளியின் சடலத்தை அரச செலவில் புதைக்க நடவடிக்கை

வித்தியா கொலை குற்றவாளியின் சடலத்தை அரச செலவில் புதைக்க நடவடிக்கை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு
மாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46) எனும் மரண தண்டனை கைதி
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

அதனை அடுத்து வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சடலத்தை ஜெயக்குமாரின்
மனைவி, தனது கணவர் ஜெயக்குமார் என்பதனை அடையாளம் காட்டியதை அடுத்து, சட்ட வைத்திய
அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை நடைபெற்றது,

உடற்கூற்று பரிசோதனையில், உயிரை மாய்த்துக்கொண்டமை உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து சடலத்தை மனைவியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வேளை, தமது
குடும்ப பொருளாதார நிலைமை காரணமாக இறுதி சடங்கினை மேற்கொள்ள முடியாது என தெரிவித்த
மனைவி, இறுதி சடங்கினை அரச செலவில் செய்யுமாறு கோரி சடலத்தை பொறுப்பேற்க மறுத்துள்ளார்

அதனை அடுத்து அரச செலவில் இறுதி சடங்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில்,
சடலம் யாழ்.போதனா வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாணவி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களின்
தீர்ப்பினை மீளவும் உறுதி செய்வதற்காக குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் இன்றைய தினம்
திங்கட்கிழமை அழைக்கப்பட்ட இருந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் உயிர் மாய்த்துள்ளமையால்,
இன்றைய தினம் வழக்கு அழைக்கப்படவில்லை. பிறிதொரு தினத்திற்கு வழக்கினை அழைக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாணவி கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில், அண்மையில் உச்ச
நீதிமன்றம் இருவரை விடுதலை செய்து ஐந்து நபர்களின் தீர்ப்பினை உறுதி செய்திருந்தது. அதில்
விசாரணைகள் நடைபெற்ற கால பகுதியில் ஒருவர் சிறையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில்,
மற்றுமொருவர் இன்றைய தினம் உயிர்மாய்த்த நிலையில்,மூவரே தற்போது மரண தண்டனை
கைதிகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரித்தது இலங்கை மத்திய வங்கி!

ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரித்தது இலங்கை மத்திய வங்கி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு