Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரித்தது இலங்கை மத்திய வங்கி!

ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரித்தது இலங்கை மத்திய வங்கி!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை (Overnight Policy Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (Basis Points) 8.75% ஆக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) அதிரடியாகத் தீர்மானித்துள்ளது.

நேற்று முன்தினம் (25) நடைபெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபைக் (Monetary Policy Board) கூட்டத்திலேயே இந்த முக்கிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள், பணவீக்கக் காரணிகள் மற்றும் எதிர்காலத்தில் நிதிச் சந்தையில் ஏற்படக்கூடிய சவாலான சூழ்நிலைகள் குறித்து உன்னிப்பாகப் பரிசீலித்த பின்னரே, நாணயக் கொள்கைச் சபை இந்த வட்டி வீத அதிகரிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இவ்வருட மார்ச் மாதத்தில் நடைபெற்ற நாணயக் கொள்கை மறுஆய்வின் போது, ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை 7.75% ஆக எவ்வித மாற்றமுமின்றிப் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப தற்போதைய கூட்டத்தில் அது 100 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் இந்த அதிரடி வட்டி வீத அதிகரிப்பு காரணமாக, வணிக வங்கிகளின் வட்டி வீதங்களிலும் வரும் நாட்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என நிதிச் சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருவாய் 2026 இல் 406 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணிசமாக அதிகரிப்பு!

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருவாய் 2026 இல் 406 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணிசமாக அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு