Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர்ப்பற்று அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது போராட்டம்-வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்

ஏறாவூர்ப்பற்று அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது போராட்டம்-வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்

3 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு முன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடாத்தப்பட்டதுடன் பிரதேச செயலகத்திற்குள்ளும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று (25) மாலை செங்கலடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் , ஞா.சிறிநேசன் செங்கலடி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மற்றும் ஏறாவூர்ப்பற்று மற்றும் ஏறாவூர் நகர சபைகளின் தவிசாளர்கள் , திணைக்கள அதிகாரிகள் , விவசாயி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது சட்ட விரோத கசிப்பு உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் சிலர் பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன். பிரதேச செயலக கூட்ட மண்டபத்திற்குள் நுழைந்து பதாதைகளை கையில் ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுத்தனர்.

இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் உள்ளிட்டோரிடம் கையளித்தனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமான முறையில் மதுபான உற்பத்திகளை கட்டுப்படுத்துவதற்கான உரரியி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த பிரச்சனை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இந்த சட்ட விரோத கசிப்பு உற்பத்திகளை தடுப்பதற்கு அனைத்துவிதமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் விசேட பொலிஸ்குழுக்களை ஏற்படுத்தி நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் இது தொடர்பில் செயற்படும் பொதுமக்களுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் அவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துமாறு இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றதை தொடர்ந்து பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின்போது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதிகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதன்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக சட்ட விரோத மதுபான உற்பத்தி , விவசாய பிரச்சினை ,காட்டு யானைப் பிரச்சினை, குப்பை மேட்டுப் பிரச்சினை, குடிநீர்த் பிரச்சினை, வீதிப் பிரச்சினை உள்ளிட்ட, சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, வாள்வெட்டு அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அத்துடன் விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதுடன் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
நாமல்-சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி கனவை விமர்சித்த பிரபு

நாமல்-சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி கனவை விமர்சித்த பிரபு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.