Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மனிதப் பாவனைக்கு ஒவ்வாத உணவு விற்ற உணவகத்தை 14 நாட்களுக்கு மூட நீதிமன்றம் உத்தரவு!

மட்டக்களப்பில் மனிதப் பாவனைக்கு ஒவ்வாத உணவு விற்ற உணவகத்தை 14 நாட்களுக்கு மூட நீதிமன்றம் உத்தரவு!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகரில் மனிதப் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், தற்காலிகமாக மூடப்பட்டிருந்த உணவகம் ஒன்றை, எதிர்வரும் 14 நாட்களுக்கு முழுமையாக மூடி வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (26) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) குறித்த உணவகத்திற்கு உடனடியாகச் சென்று, அதனை மூடி உத்தியோகபூர்வமாகச் சீல் வைத்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரின் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு அருகாமையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில், மனிதப் பாவனைக்கு ஒவ்வாத மற்றும் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து, கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குறித்த உணவகத்திற்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உணவகத்தின் நிர்வாகப் பொறுப்பதிகாரியை (நடத்துனர்) இன்று மே 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அந்த உணவகத்தில் காணப்பட்ட பின்வரும் பாரிய குறைபாடுகளை நீதவானின் கவனத்திற்கு ஆதாரங்களுடன் முன்வைத்தனர்:

மனித நுகர்வுக்கு முற்றிலும் தகுதியற்ற மற்றும் கெட்டுப்போன உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தியிருந்தமை.

உரிய உணவு அதிகாரியின் முறையான அனுமதியின்றி, சட்டவிரோதமாக உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தமை.

மனித ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவகத்தை நடத்திச் சென்றமை.

உணவகத்தின் கழிவுநீரை முறையான வடிகால் அமைப்பின்றி வெளியேற்றியமை.

உணவு சமைக்கும் மற்றும் கையாளும் இடப்பரப்பில் தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் விலங்குகள் (பூனைகள்) நடமாடியமை.

ஈக்கள் மற்றும் கிருமிகள் தொற்றும் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில், மூடிகள் இடப்படாத திறந்த கழிவுத்தொட்டிகளைப் பயன்படுத்தியமை.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை உன்னிப்பாகப் பரிசீலித்த நீதவான், உணவகத்தில் காணப்படும் அனைத்துக் குறைபாடுகளையும் முழுமையாகத் திருத்தம் செய்யும் வரை, 14 நாட்களுக்கு உணவகத்தைத் தற்காலிகமாக மூடி வைக்குமாறு கட்டளையிட்டார். அதேவேளை, கடந்த சில நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உணவகத்தின் நிர்வாகியை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, உடனடியாகச் செயற்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், அந்த உணவகத்தைப் பூட்டி, அதன் பிரதான வாயிலில் நீதிமன்றக் கட்டளைப் பத்திரத்தை ஒட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை; நிரம்பி வழியும் நீர்தேக்கங்கள்!

கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை; நிரம்பி வழியும் நீர்தேக்கங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.