Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண்களுக்கு சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை குறித்து அரசிடம் கோரிக்கை!

பெண்களுக்கு சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை குறித்து அரசிடம் கோரிக்கை!

3 months ago
in செய்திகள்

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை Family Planning Association of Sri Lanka நிறைவேற்றுப் பணிப்பாளர் Rushitha Perera தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், தங்களது அமைப்பில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை வழங்கும் நடைமுறை கடந்த ஆண்டே உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோன்று, அரச நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் இந்த விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, தொழில் அமைச்சு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரச மற்றும் தனியார் துறைகளில் இந்த நடைமுறையை அமல்படுத்த முடிந்தால் அது முக்கிய முன்னேற்றமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மாதவிடாய் காலத்தில் பெண்களின் நலனைக் கவனிப்பது சமூகப் பொறுப்பு என்பதைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை இந்த முயற்சியில் இணைத்துக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உலகளவில் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களுக்கான வரிகளை நீக்குதல் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையிலும் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களுக்கான வரிகளை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் இந்த உத்தியோகபூர்வ கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

​தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்; 2 சிறுவர்கள் பலி
செய்திகள்

​தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்; 2 சிறுவர்கள் பலி

September 11, 2026
ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்
அரசியல்

ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்

September 10, 2026
ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
செய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

September 10, 2026
வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு
செய்திகள்

வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

September 10, 2026
ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
Next Post
பௌத்த மதத்தை பார்த்துக்கொள்ள எமக்கு தெரியும்; எவரும் விமர்சிக்க தேவையில்லை; ஞானசார தேரர்

பௌத்த மதத்தை பார்த்துக்கொள்ள எமக்கு தெரியும்; எவரும் விமர்சிக்க தேவையில்லை; ஞானசார தேரர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு