Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் வீட்டிலிருந்த சீட்டுப் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

யாழில் வீட்டிலிருந்த சீட்டுப் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சிப் பகுதியில் உள்ள இரண்டு வெவ்வேறு வீடுகளில் நுழைந்த திருடர்கள், ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வல்வெட்டித்துறை மற்றும் உடுப்பிட்டி ஆகிய பகுதிகளிலேயே அடுத்தடுத்து இந்தத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றினுள் நள்ளிரவு நுழைந்த திருடர்கள், அங்கிருந்த ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருடர்கள் வீட்டின் சமையலறைப் பக்கக் கதவு அல்லது ஜன்னல் ஊடாக வீட்டிற்குள் நுழைந்து, இப்பணத்தைக் களவாடிச் சென்றுள்ளனர். குறித்த வீட்டு உரிமையாளர் ‘சீட்டுப் பிடிக்கும்’ தொழில் செய்து வருபவர் எனத் தெரியவந்துள்ளது.

நேற்றையதினம் சீட்டுப் பணம் கொடுப்பதற்காக, வசூலிக்கப்பட்ட 1 கோடியே 15 இலட்சம் ரூபாயை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த வேளையிலேயே இந்தத் திட்டமிட்ட கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாதிக்கப்பட்ட உரிமையாளர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதைத் தொடர்ந்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டை இலக்கு வைத்து அடுத்த திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீட்டு உரிமையாளர் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாகச் சந்தேகமடைந்து நகைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று பார்த்த போது, அங்கிருந்த 25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பிலும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சிப் பகுதியில் ஒரே இரவில் இடம்பெற்ற இந்த பண மற்றும் நகைக் கொள்ளைகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

கொள்ளையர்களைக் கண்டறிய மோப்ப நாய்கள் மற்றும் விரல் அடையாள நிபுணர்களின் உதவிகளைப் பெறப் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
தித்வா காலத்தில் அரசுக்கு கிடைத்த 1000 கோடிக்கு கணக்கு இல்லையாம்

தித்வா காலத்தில் அரசுக்கு கிடைத்த 1000 கோடிக்கு கணக்கு இல்லையாம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.