மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மஹா சனிப்பிரதோஷ விரத நிகழ்வு எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சனிக்கிழமையான அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகளுடன் விரத நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆன்மிக நிகழ்வில் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு அனைத்து பக்தர்களுக்கும் ஆலய நிர்வாக சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மஹா சனிப்பிரதோஷ விரதத்தை முன்னிட்டு விசேட அபிஷேகங்கள், அர்ச்சனைகள் மற்றும் சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









