Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையானின் உரிமை பறிக்கப்பட்டமைக்காக நாங்கள் குரல் கொடுப்போம்; உதய கம்மன்பில

பிள்ளையானின் உரிமை பறிக்கப்பட்டமைக்காக நாங்கள் குரல் கொடுப்போம்; உதய கம்மன்பில

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிள்ளையானின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அவருக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை ஆகியவற்றை சவாலுக்குட்படுத்தி பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் தான் பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்று ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் வெளியில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நீதிமன்றத்துக்கு கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய விவகாரம் தொடர்பிலே அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது செய்யப்பட்ட பிள்ளையான் சுமார் 14 மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது பாதுகாப்பு தொடர்பில் எமக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இல்லாத அக்கறை அரசாங்கத்துக்கு உள்ளது. அதனால் தான் அவர் அதிபாதுகாகாப்பு வலயமாக உள்ள வெலிசர கடற்படை முகாமில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பிள்ளையானின் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. அவருக்காக நாங்கள் குரல் கொடுப்போம்.அவரை பாதுகாப்போம். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் யாரையாவது பகடைகாயாக்குவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. உண்மையை வெளிக்கொண்டு வரும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
Next Post
யாழ் நீதிபதி திடீர் இடமாற்ற சர்ச்சை; ஆசிரியர் சங்க தரப்பிலிருந்து எழுந்துள்ள சந்தேகம்

யாழ் நீதிபதி திடீர் இடமாற்ற சர்ச்சை; ஆசிரியர் சங்க தரப்பிலிருந்து எழுந்துள்ள சந்தேகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு