Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல்; செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல்; செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

1 day ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் கடுமையாக கொந்தளிக்கும் அபாயம் நிலவுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (04) காலை 10.30 மணி முதல் நாளை (05) காலை 10.30 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், கடல் அலைகளின் உயரம் 2 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால், குறித்த கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், மீனவர்கள், கடல்சார் தொழிலாளர்கள் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவிற்கு மேற்பட்ட பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் மற்றும் திடீர் பலத்த காற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

June 5, 2026
பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!
செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

June 5, 2026
Next Post
யாழ் பல்கலை விரிவுரையாளர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஆதாரம்

யாழ் பல்கலை விரிவுரையாளர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஆதாரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு