செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றையதினம் (04) வியாழக்கிழமை புதிதாக 08 என்புக்கூட்டு
தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அடையாளம் காணப்பட்ட
என்புக்கூட்டு தொகுதியில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வு பணியின் 16ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய
தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதன்போது 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம்
காணப்பட்ட என்புக்கூட்டில் 07 என்புக கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 283 என்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்ட நிலையில் 279 என்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.









