Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

3 months ago
in செய்திகள்

திருகோணமலை பிராந்திய மன்ற நிகழ்வு மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்களது பங்குபற்றலுடன் மிகவும் கோலாகலமாக திருகோணமலையில் நேற்று (06) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இலங்கை மத்தியவங்கியின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்தின் முகாமையாளர் கறுப்பையா பிரபாகரன் அவர்களது தலைமையில் இடம் பெற்ற திருகோணமலை பிராந்திய மன்றத்தின் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

இந் நிகழ்வில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர், மத்திய வங்கியின் உதவி ஆளுநர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றம் அம்பாரை மாவட்டங்களின் மாவட்ட அரசாங்க அதிபர்கள், முப்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வங்கிகளின் முகாமையாளர்கள், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் மற்றும் நளிவுற்ற மக்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்காகவே இவ்வாறான பிராந்திய மன்றங்கள் நிறுவப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்கு அதிக வளங்களை கொண்ட பிரதேசமாக திருகோணமலை காணப்படுவதாகவும் அதிலும் அதிகமாக சுற்றுலா பயணிகளை கவர்ந்தீர்த்து சுற்றுலா துறை ஊடாக அதிக வருமானத்தை ஈட்டக் கூடிய பிரதேசமாகவும் திருகோணமலை காணப்படுவதாகவும் இதன் போது மத்திய வங்கியின் ஆளுநர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

அதே போன்று இங்கு இடப்பிரச்சனை காணப்படுமாக இருந்தால் காணி அமைச்சும் கைத்தொழில் அமைச்சும் இணைந்து கலந்துரையாடி நல்ல பல முடிவுகளை எட்ட முடியும் என்பதுடன், வங்கிகள் மூலமாக குறைந்த வட்டியுடன் கடன்களை பெற்று சுய தொழில் முயற்சியாளர்கள் நன்மையடைய முடுயும் என்றார்.

அதனைத் தொடர்ந்து திறந்த விவாத மேடை ஆரம்பமாகியதுடன் இதன் போது நாட்டின் பொருளாதார போக்கு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் உள்ளிட்ட நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான சில ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்ட விடையங்கள் தொடர்பான கேள்விகள் மற்றும் ஆலோசனைகளுக்கான பதில்களையும் தெளிவூட்டல்களையும் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட மத்திய வங்கியின் பிரதி மற்றும் உதவி ஆளுநர்களினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான திட்ட முன்மொழிவொன்று இதன் போது மத்திய வங்கியின் ஆளுநர் அவர்களிடம் மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா உள்ளிட்ட வர்த்த சங்கத்தின் பிரதிநிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டதுடன், அவற்றில் உள்ளடங்கியுள்ள விடையங்கள் தொடர்பாக சாத்தியவள அறிக்கைகளை பெற்று அவற்றுள் முடியுமானவற்றை மிக விரைவில் செயற்படுத்த முயற்சிப்போம் என மத்திய வங்கியின் ஆளுநர் இதன் போது தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.