Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

கல்முனை கார்மல் பத்திமா கல்லூரியில் கடந்த 06.06.2026 அன்று இலங்கை பாடசாலை செஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (KM/KM.G.M.M.S) மாணவர்கள் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டியின் 10 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்ற ஏ.மிஷால் உமைர் சாம்பியன் பட்டத்தை வென்று தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார். அதேவேளை, 6 வயதுக்குட்பட்ட பிரிவில் எம்.எச்.ஹஸிமா மர்யம் முதல் ரன்னர்-அப் இடத்தையும், 8 வயதுக்குட்பட்ட பிரிவில் எம்.எச்.முஹம்மது ஹாஸிக் இரண்டாம் ரன்னர்-அப் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும், எம்.எச்.ஹஸிமா மர்யம் (தரம் 1), எம்.எச்.முஹம்மது ஹாஸிக் (தரம் 3), எம்.ஏ.ஏ.அபீக் அஹமட் (தரம் 2), எம்.எஸ்.யூசுப் ஐமான் (தரம் 2), எம்.ரீ.எம். மஹ்தி ஹசன் (தரம் 3), ஏ.மிஷால் உமைர் (தரம் 4), எம்.ஏ.கே. அஹமட் ஸைன் மஹ்தி (தரம் 5) ஆகிய ஏழு மாணவர்கள் மாகாண மட்ட செஸ் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.

இளம் வயதிலேயே செஸ் விளையாட்டில் தமது திறமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள இம்மாணவர்களின் வெற்றி, பாடசாலைக்கும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்விச் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கு வழிகாட்டி ஊக்கமளித்த பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், பிரதி அதிபர் யூ.எல். றின்ஸா பர்வின், பயிற்றுவிப்பாளர்களான இஸ்மாயில் அஸ்லம் சுஜா மற்றும் எம்.ஏ.ஏ.அதீப் ஆகியோருக்கும், மாணவர்களின் வெற்றிக்கு பின்னணியில் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!

October 27, 2026
தமிழக சிறை ஒன்றிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்
உலக செய்திகள்

தமிழக சிறை ஒன்றிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்

October 27, 2026
சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!
செய்திகள்

சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

October 27, 2026
ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குக!; ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
செய்திகள்

ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குக!; ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை

October 27, 2026
செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!
செய்திகள்

செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!

October 27, 2026
தீபாவளிக்கு முன்பே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை
செய்திகள்

தீபாவளிக்கு முன்பே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை

October 27, 2026
Next Post
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு