Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரசவத்திற்குப் பின்னர் தாயும் சிசுவும் உயிரிழப்பு; மருத்துவ அலட்சியம் என குற்றச்சாட்டு!

பிரசவத்திற்குப் பின்னர் தாயும் சிசுவும் உயிரிழப்பு; மருத்துவ அலட்சியம் என குற்றச்சாட்டு!

3 months ago
in செய்திகள்

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாயும், அவருக்குப் பிறந்த பெண் சிசுவும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹசலக, மினிப்பே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான எச்.எம். ஸ்வர்ணமலா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினரின் தகவலின்படி, கர்ப்பகால பரிசோதனைகளின் போது குழந்தை வழமையை விட அதிக வளர்ச்சியடைந்திருந்ததால், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் ஆரம்பத்தில் பரிந்துரைத்திருந்தனர்.

எனினும், மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாதாரண பிரசவத்தை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அந்த முயற்சி வெற்றியளிக்காத நிலையில், இறுதியில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பெண் சிசு உயிரிழந்ததுடன், தாயின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பதுளை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஸ்வர்ணமலா, கடந்த 6ஆம் திகதி அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இந்த இரு உயிரிழப்புகளும் மருத்துவ அலட்சியத்தின் விளைவாக ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் அதிகாரப்பூர்வ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
Next Post
சுரேஷ் சலேக்கு எதிரான சாட்சியங்கள் நிரூபணம்; ஆனந்த விஜயபால தகவல்

சுரேஷ் சலேக்கு எதிரான சாட்சியங்கள் நிரூபணம்; ஆனந்த விஜயபால தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு