Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“ஈழத்து மருமகன் என்ற வகையில் எங்களுக்கு உரிமை உண்டு”; முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை!

“ஈழத்து மருமகன் என்ற வகையில் எங்களுக்கு உரிமை உண்டு”; முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை!

3 months ago
in செய்திகள்

இந்திய – இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாக தலையிட வேண்டும் என அகில இலங்கை கடற்றொழிலாளர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி. சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள இழுவைமடித் தொழில் இலங்கை வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 60 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த இழுவைமடித் தொழில் மீண்டும் தொடங்கப்படவுள்ள நிலையில், அது இந்திய மீனவர்களுக்கு சாதகமானதாக இருந்தாலும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழிலாளர் பிரச்சினை இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும், பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் ஆக்கபூர்வமான தீர்வுகள் எட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக முன்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட உடன்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாதுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, இந்திய மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து, இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
ரணிலுக்கு “புதிய உடல், புதிய இதயம்” பொருத்தப்பட்டுள்ளது; ஹரீன் பெர்னாண்டோ

ரணிலுக்கு “புதிய உடல், புதிய இதயம்” பொருத்தப்பட்டுள்ளது; ஹரீன் பெர்னாண்டோ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு