Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விசேட தேவையுடைய முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களுக்கான நிவாரணங்களை விரைவுபடுத்த நடவடிக்கை!

விசேட தேவையுடைய முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களுக்கான நிவாரணங்களை விரைவுபடுத்த நடவடிக்கை!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களுக்கான நிவாரணங்களை விரைவாக வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேக்கர தலைமையில் நடைபெற்றுள்ளது.

கடந்த 9ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், யுத்தக் காலத்தில் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸ் உறுப்பினர்களைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அவர்களது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில், பயங்கரவாதச் செயல்கள் காரணமாக உயிரிழந்தவர்கள், நிரந்தர ஊனமுற்றவர்கள் அல்லது உடல்நலக் காரணங்களால் சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்களை மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சின் பிரதிநிதித்துவத்துடன் மருத்துவக் குழுவொன்றை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், இந்த மருத்துவக் குழுவின் சேவைகளை நாடு முழுவதும் பிரதேச மட்டத்திற்கு விரிவுபடுத்தி, நிவாரணம் பெறத் தகுதியானவர்களை எளிதில் அடையாளம் கண்டு உதவிகளை வழங்குவதற்கான நடைமுறை வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிவாரணங்களை எதிர்பார்த்து நாட்டின் பல பகுதிகளில் உள்ள முன்னாள் மற்றும் தற்போதைய பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், முப்படைகளின் மருத்துவ வளங்களைப் பயன்படுத்தி விரைவான சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், தகுதி பெற்ற அனைவருக்கும் நிவாரணங்கள் தாமதமின்றி சென்றடைவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
உள்நாட்டு இறைவரி சட்டத்தில் புதிய திருத்தங்கள்; கட்டாயமாக்கப்பட்டது டின் இலக்கம்

உள்நாட்டு இறைவரி சட்டத்தில் புதிய திருத்தங்கள்; கட்டாயமாக்கப்பட்டது டின் இலக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு