Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் தந்தையின் சடலம், உரிய கட்டணம் அறவிடப்படாமலும் வழமையான நடைமுறைகள் பின்பற்றப்படாமலும் தகனம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பிரதேச சபையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி விளாவெளி இந்து மயானத்தில் குறித்த உறுப்பினரின் தந்தையின் சடலம் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், மயான பயன்பாட்டுக்கான கட்டணம் அப்போது அறவிடப்படவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் இந்த விடயம் ஏனைய உறுப்பினர்களின் கவனத்திற்கு வந்ததையடுத்து, சபைக் கூட்டங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, சம்பவம் இடம்பெற்ற சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர், கடந்த மே 25ஆம் திகதி அவசரமாக கட்டணம் அறவிடப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையாக, மயானத்தில் சடலத் தகனத்திற்காக விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்தல், உரிய ஆவணங்களை சமர்ப்பித்தல், கட்டணம் செலுத்துதல் மற்றும் அதிகாரப்பூர்வ அனுமதி பெறுதல் ஆகிய நடைமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும். ஆனால் குறித்த சம்பவத்தில் அவை கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண உள்ளூராட்சி நியதிச் சட்டங்களின்படி, பிறப்புச் சான்றிதழ், மரணச் சான்றிதழ், கிராம அலுவலர் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களும், பிரதேச சபையால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரமும் இன்றி தகன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த சடலத் தகனத்தில் நடைமுறைகள் மீறப்பட்டதாக கூறப்படும் நிலையில், உறுப்பினருக்கு விசேட சலுகை வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பில் கடந்த சபைக் கூட்டத்திலும் உறுப்பினர்கள் விளக்கம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு