Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

9 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பாய் யின்ஷான் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினருக்கிடையிலான சந்திப்பு இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த சைனா ஹார்பர் நிறுவனத்தின் தலைவர், ஜனாதிபதியின் நேரடியான மற்றும் தொலைநோக்குப் பார்வையுடைய தலைமைத்துவம் காரணமாக இலங்கையில் முதலீடு செய்வதற்கான நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பு துறைமுக நகர் சிறப்பு பொருளாதார வலயத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கி வரும் ஊக்குவிப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கை பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதையும் பாராட்டினார்.

சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் முக்கிய பங்காற்றுகின்றன என வலியுறுத்தினார்.

முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளையும், கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையையும் வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டிற்கு பயனளிக்கும் முதலீடுகளுக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், கொழும்பு துறைமுக நகரை முன்னேறிய பொருளாதார மையமாக மாற்றுவது அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியமைக்காக சைனா ஹார்பர் நிறுவனத்திற்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
Next Post
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு