கண்டி – குருணாகல் பிரதான வீதியின் உடகொட்டமுல்ல பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெரெல்லகம பகுதியைச் சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டியிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததையடுத்து, முன்னால் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அவருடன் பயணித்த மற்றொருவரும் கலகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பெற்று வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








