தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (14) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால், இணையத்தளத்தில் காணப்பட்ட தொடருந்து நேர அட்டவணை தொடர்பான தகவல்களைப் பெறும் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் இணையத்தளத்தின் சில சேவைகளை பயன்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சேவைகளை மீள வழமைக்கு கொண்டு வரும் பணிகள் தற்போது அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சைபர் மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








