காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்கு அருகில் அமைந்துள்ள மின்மாற்றி ஒன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன், வைத்தியசாலை அதிகாரிகளும் காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்து காரணமாக புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்கான மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நோயாளர்களின் சிகிச்சை நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








