ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் போது தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்று (17) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரியவுடன் அமர்வில் இருந்த நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ, குறித்த மனுவை விசாரணை செய்வதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதேவேளை, மனு தொடர்பான ஆவணங்கள் இன்று காலைதான் கிடைத்ததாகவும், பிரதிவாதிகளிடமிருந்து மேலதிக அறிவுறுத்தல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதேசமயம் உயிர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை நாளை (18) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) தீர்மானித்துள்ளது








